தேசியம்
செய்திகள்

ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட மத்திய அரசாங்கம்

மத்திய அரசாங்கம் ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (23) இந்த தகவலை வெளியிட்டார்.

நான்கு Atlantic மாகாணங்களுடனும், Ontarioவுடனும் கொள்கை அடிப்படையில் சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் தனது அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் வியாழனன்று கூறினார்.

மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு குறித்த ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக Ontario மாகாண அரசாங்கம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

10 வருட ஒப்பந்தத்தை புதன்கிழமை (22) ஏற்றுக்கொண்டதாக Ontario சுகாதார அமைச்சர் Sylvia Jones தெரிவித்தார்.

நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த ஒப்பந்தத்தில் மதிப்புரைகளை இணைக்க இரு தரப்பும் இணங்கியுள்ளன.

இந்த நிலையில் Ontario முதல்வர் Doug Ford, Prince Edward Island முதல்வர் Dennis King ஆகியோருடனான ஒப்பந்தங்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதில் Ontarioவுடனான ஒப்பந்தம் 74 பில்லியன் டொலர்கள் மதிப்புடையதாகும்.

இந்த 10 வருட ஒப்பந்தத்தில் 8.4 பில்லியன் டொலர் புதிய நிதியும், அவசர தேவைகளுக்கான 776 மில்லியன் டொலர் புதிய நிதியும் அடக்குவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்தது.

Prince Edward Island ஒப்பந்தம் 996 மில்லியன் டொலர்கள் மதிப்புடையது.

இதில் 228 மில்லியன் டொலர் புதிய நிதியும் அடங்குகிறது.

மாகாணங்கள், பிரதேசங்களுக்கு சுகாதார நிதியுதவியை அடுத்த 10 ஆண்டுகளில் 196.1 பில்லியன் டொலராக அதிகரிக்க மத்திய அரசு உறுதியளித்தது.

இதில் 46.2 பில்லியன் டொலர் புதிய நிதி உதவியும் அடங்குகிறது.

இந்த சலுகையை ஏற்க இந்த மாத ஆரம்பத்தில் முதல்வர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு அதிகார வரம்பிற்கும் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய, மாகாணங்கள் பிரதேசங்களுடன் தனித்தனியான இருதரப்பு ஒப்பந்தங்களை மத்திய அரசு கையெழுத்திட்டு வருகிறது.

Related posts

வட்டி வீதத்தினை 4.5 சதவீதமாக வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு

வாழ்க்கைச் செலவு பிரதான பேசுபொருள் ஆகும் Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: Hammer throw போட்டியில் கனடா முதல் முறையாக வென்றது தங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment