கிழக்கு Ottawaவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்துடன் குற்றவியல் தொடர்பு உள்ளது என Ottawa கால்வதுறையினர் தெரிவித்தனர்.
பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டதுடன், மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம், ஒரு குற்றவியல் சம்பவம் என Ottawa காவல்துறை கூறுகிறது.
இந்த விசாரணையை தீவைப்பு பிரிவு பொறுப் பேற்றுள்ளதாக புதன்கிழமை (22) காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதிதாக நிர்மாணிக்கப்படும் குடிமனை தொகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் காயமடைந்தனர்.
இதில் இடிபாடுகளில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டனர்.