Toronto பெரும்பாகத்தில் உள்ள இந்து ஆலயங்கள் மீதான அண்மைய தாக்குதல்களை Brampton நகர முதல்வர் கண்டிக்கின்றார்.
Peel பிராந்தியத்திலும், Toronto பெரும்பாகத்திலும் உள்ள இந்து ஆலயங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களை கண்டிப்பதாக புதன்கிழமை (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Brampton நகர முதல்வர் Patrick Brown தெரிவித்தார்.
ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு எதிரான மிரட்டல், நாசப்படுத்துதல் அல்லது வெறுப்பு போன்ற எந்தச் செயலும் கண்டிக்கத்தக்கது என முதல்வர் Patrick Brown கூறினார்.
கடந்த வருடம் July மாதம் முதல், Toronto பெரும்பாகத்தில் உள்ள நான்கு இந்து ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.