முதற்குடியினப் பெண்கள் காணாமல் போகும் தருணத்தில் பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிப்பை அனுப்பும் செயல்முறையை ஏற்படுத்துமாறு மத்திய அரசை NDP நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
இந்த விடயம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicinoவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் Leah Gazan கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Red Dress Alert என இந்த செயல்முறைக்கு அவர் பெயர் சூட்டியுள்ளார்.
முதற்குடியினப் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போகும் தருணங்களில் அது குறித்து பொதுமக்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டால், அது அவர்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என Leah Gazan நம்பிக்கை தெரிவித்தார்.
இது Amber Alert செயல்முறைக்கு ஒத்ததாக இருக்கும் என Winnipeg நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.