Quebec மாகாணத்தின் Montrealலுக்கு தெற்கே உள்ள அதிகாரப்பூர்வமற்ற Roxham வீதி எல்லை கடவையை மூடும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதன் மூலம் இந்த முயற்சியில் தனது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை மாற்றுவது ஒழுங்கற்ற முறையில் கனடாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் வருகையை கட்டுப்படுத்தாது என கனடாவிற்கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.
இந்த அதிகாரப்பூர்வமற்ற வீதி எல்லை கடவையை 30 நாட்களுக்குள் மூட வேண்டும் என Conservative கட்சி தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார்.
இந்த எல்லைக் கடவை ஊடாக கனடாவுக்குள் நுழையும் அகதி கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற Quebec மாகாண அரசியல் தலைவர்களின் அழைப்புகளுக்கு மத்தியில் இந்த கோரிக்கையை Pierre Poilievre முன்வைத்தார்.
பிரதமர் Justin Trudeauவின் நடவடிக்கைகளினால் அகதிக் கோரிக்கையாளர்களின் வருகை அதிகரித்து வருவதாக Pierre Poilievre கூறினார்.
அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடவை ஊடான அகதி கோரிக்கையாளர்களின் வருகையை Justin Trudeau ஊக்குவிப்பதாகவும் Pierre Poilievre குற்றம் சாட்டினார்.