Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory முறைப்படி விலகினார்.
John Tory புதன்கிழமை (15) மாலை தனது பதவி விலகல் அறிவிப்பை சமர்ப்பித்தார்.
பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஐந்து நாட்களுக்குப் பின்னர் John Tory தனது பதவி விலகல் கடித்தை சமர்ப்பித்தார்
வெள்ளிக்கிழமை (17) மாலை 5 மணி முதல் நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுவதாக அவரது அலுவலகம் அறிவித்தது
Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை (10) John Tory அறிவித்திருந்தார்
COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக் கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory அறிவித்தார்.