Nova Scotia மாகாணத்தில் திங்கட்கிழமை (13) பிற்பகல் ஆரம்பமான கடுமையான பனி வீழ்ச்சி செவ்வாய்கிழமை(14) காலை வரை தொடர்ந்தது.
Nova Scotiaவின் பெரும்பகுதியில் பனிப்பொழிவு செவ்வாய் காலையுடன் நிறைவடைந்தது.
சில பகுதியில் 30 சென்றி மீற்றருக்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவானது.
இந்த நிலையில் மாகாணம் முழுவதும் பனி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை வாரியங்களும் இந்த பனிபொழிவால் செவ்வாயன்று மூடப்பட்டன.