2021 ஆம் ஆண்டு Ontario மாகாணத்தின் Brampton நகரில் நிகழ்ந்த இளைஞனின் மரணத்தில் கொலை குற்றச்சாட்டு Toronto காவல்துறை அதிகாரி மீது சுமத்தப்பட்டது.
Chadd Facey என்ற 19 வயதான இளைஞனின் மரணம் குறித்த குற்றச்சாட்டை Toronto காவல்துறை அதிகாரி Const. Calvin Au எதிர்கொள்கிறார்.
April மாதம் 26 ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவம், போலி கடிகாரம் விற்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்றது
பணியில் இல்லாத Toronto காவல்துறை அதிகாரிகள் இந்த இளைஞரை துரத்திச் சென்று கைது செய்தபோது காயமடைந்தவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துடன் இரண்டு காவல்துறையினர் தொடர்புபட்டிருப்பது தெரியவந்ததையடுத்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்திருந்தது.