அமெரிக்காவினால் Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத உயரமான பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி வந்து கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.
வெள்ளிக்கிழமை (10) பிற்பகல், Alaska கரையோரத்தில் பறந்து கொண்டிருந்த அடையாளம் காணப்படாத உயரமான பொருளை F-22 போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி Joe Biden இதற்கு நேரடி உத்தரவை வழங்கியுள்ளார்
இந்த சம்பவம் கனேடிய எல்லைக்கு அருகில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.
இந்த விவகாரம் குறித்து தன்னிடம் விளக்கமளிக்கப்பட்டதாக கனேடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
குறிப்பிட்ட பொருளை சுட்டு வீழ்த்தியதற்கான முடிவை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரை Pentagonனில் சந்தித்த சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.