February 23, 2025
தேசியம்
செய்திகள்

சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்த முதல்வர்கள் சந்திப்பு தாமதம்

மத்திய அரசின் சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்து விவாதிக்கும் சந்திப்பை முதல்வர்கள் தாமதப்படுத்துகின்றனர்.

செவ்வாய்கிழமை (07) மாகாண, பிராந்திய முதல்வர்களை சந்தித்த பிரதமர் Justin Trudeau, $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டத்தை முன்வைத்தார்.

பிரதமரின் இந்த திட்டத்தை முதல்வர்கள் இன்னும் ஏற்கவில்லை.

மாகாணங்களுக்கு $46.2 பில்லியன் புதிய நிதி உதவியை வழங்கும் Ottawaவின் இந்த திட்டம் குறித்து விவாதிக்க முதல்வர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (13) சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு முதலில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இந்த இருதரப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வியாழக்கிழமை (09) முதல்வர் Doug Ford, Ontario சுகாதார அமைச்சர் Sylvia Jones ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என Ford கூறினார்.

Related posts

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம்

Quebec முதியவர்களுக்கு இரண்டாவது booster தடுப்பூசிகள் வழங்கல்

Lankathas Pathmanathan

சமாதானத்தை நோக்கிய பாதையில் கனடா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்!

Lankathas Pathmanathan

Leave a Comment