தேசியம்
செய்திகள்

Hong Kong குடியிருப்பாளர்களுக்கான பணி அனுமதி திட்டத்தை விரிவுபடுத்தும் கனடிய அரசு

Hong Kong குடியிருப்பாளர்களுக்கான பணி அனுமதி திட்டத்தை கனடிய அரசாங்கம் விரிவுபடுத்துகிறது.

குடிவரவு அமைச்சர் Sean Fraser திங்கட்கிழமை (06) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

மத்திய அரசு தற்காலிக மூன்று ஆண்டு திறந்த வேலை அனுமதிக்கான விண்ணப்ப காலக்கெடுவை February 7, 2025 வரை நீட்டிப்பதாக அமைச்சர் அறிவித்தார்.

இந்த அனுமதி திட்டம் செவ்வாய்க்கிழமையுடன் (07) காலாவதியாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் கனடா அல்லது வெளிநாட்டில் உள்ள உயிர் கல்வி நிலையத்தில் பட்டம் பெற்ற Hong Kong குடியிருப்பாளர்களுக்கு கனடிய அரசாங்கம் தகுதியை விரிவுபடுத்துவதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

முன்னதாக, விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை அமுலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய வங்கி அறிவிப்பு

Lankathas Pathmanathan

Fiona புயலின் விளைவாக குறைந்தது மூவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment