ரஷ்யா மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனில் தொடரும் போருக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா மீது கனடா மீண்டும் தடைகளை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஊடகப் பிரமுகர்கள், நிறுவனங்கள் மீது இன்றைய தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது.
ரஷ்யாவின் தவறான தகவல்களினால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.
ரஷ்யாவின் போர் பொய்களையும் ஏமாற்றுதலையும் அடிப்படையாகக் கொண்டது என இந்த தடைகளை அறிவிக்கும் செய்தி குறிப்பில் கனடிய அரசாங்கம் கூறியது.
ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து கனடா 1,600 தனிநபர்கள், நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது.