COVID தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே booster தடுப்பூசியை பெற வேண்டும் என Quebec பொது சுகாதாரம் மையம் பரிந்துரைக்கிறது.
Quebec பொது சுகாதார இயக்குனர் Dr. Luc Boileau வியாழக்கிழமை (02) பிற்பகல் நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இந்த அறிவித்தலின் மூலம் Quebec மாகாணம் அதன் தடுப்பூசி உத்தியை மாற்றுகிறது.
தொற்று இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு booster தடுப்பூசியை மட்டுமே பொது சுகாதார மையம் பரிந்துரைக்கிறது.
அதேவேளை நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களும், அவர்கள் தொற்று ஏற்பட்டிருந்தாலும் கூட booster தடுப்பூசியை பெற வேண்டும் என Quebec பொது சுகாதாரம் மையம் பரிந்துரைக்கிறது.
60 வயதிற்குட்பட்ட Quebec வாசிகளில் 75 சத வீதமானவர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட Quebec வாசிகளில் 50 சத வீதமானவர்களும் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
COVID அல்லது ஏதேனும் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட எவரும் பொது சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் Boileau கூறினார்.