Calgary Albertaவில் தனிமைப்படுத்தல் விடுதிக்காக கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் 6.8 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது.
Calgary விமான நிலையத்திற்கு அருகிலுள்ள Westin விடுதியில் 2020 முதல் 2022 வரை 26.8 மில்லியன் டொலர்கள் தனிமைப்படுத்தலுக்கு செலவிடப்பட்டுள்ளது.
Calgary-Nose Hill தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Michelle Rempel-Garner முன்வைத்த பொறிமுறை நகர்வின் பலனாக இந்த விபரங்கள் வெளியாகின.
2020இல் 119, 2021இல் 1,356, 2022இல் 15 என மொத்தம் 1,490 பயணிகள் இந்த விடுதியை பயன்படுத்தியுள்ளனர்.
இந்தச் செலவுக்கு எந்த நியாயமும் இல்லை என கூறிய Rempel-Garner, இது முழுமையான தவறான நிர்வாகம் என தெரிவித்தார்.
ஆனாலும் தொற்றின் பரவலைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் இந்த விடுதிகளின் பயன்பாடு ஒரு முக்கியமான நடவடிக்கை என அரசாங்கத்தின் பேச்சாளர் கூறினார்.
கனடாவில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவாகின.
Health கனடாவின் தரவுகளின் பிரகாரம் 50,380 பேர் தொற்றால் மரணமடைந்தனர்.