மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம் வியாழக்கிழமை (02) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நீதி அமைச்சர் David Lametti இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
மனநலக் கோளாறு மட்டுமே அடிப்படை நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி பெறும் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்த இந்த சட்டமூலம் வழிவகுக்கிறது.
அரசாங்கத்தின் தாமதத்தை கோருவதற்கான இந்த முடிவு பொறுப்பற்ற அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Cooper தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த விரிவாக்கத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என அவர் கூறுகின்றார்.