தேசியம்
செய்திகள்

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Markham Ontario விடுதியில் கடுமையான காயங்களுடன் குழந்தை ஒன்று மீட்கப்பட்டதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை (31) மதியம் பலத்த காயங்களுடன் ஒரு குழந்தை விடுதியில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து York பிராந்திய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு, காயமடைந்த இரண்டு மாத குழந்தை ஒன்றை மீட்டுள்ளனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இந்த சம்பவத்துடன் தொடர்பாக அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குழந்தைக்கும் கைதானவருக்கும் இடையிலான தொடர்பு தெளிவாகத் தெரியவில்லை.

அதேவேளை கைதானவர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என காவல்துறை கூறியுள்ளது.

Related posts

உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா ஆராய்கிறது

Lankathas Pathmanathan

மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டவுள்ள எரிபொருளின் சராசரி விலை!

Lankathas Pathmanathan

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment