ரஷ்யாவைச் சேர்ந்த Wagner குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட வேண்டும் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர்
மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
NDP நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson இந்த ஒப்புதல் கோரியிருந்தார்.
Wagner குழுமம் விபரிக்க முடியாத போர்க் குற்றங்களை இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
கனடாவின் இந்த முடிவு ஏனைய நாடுகள் அதன் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம் என McPherson நம்பிக்கை தெரிவித்தார்.