தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கை அரசாங்க அதிகாரிகள் மீது சர்வதேச வழக்குகள் தொடர கனடாவின் ஆதரவை உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு கோருகிறது.
இந்த கோரிக்கையை முன்வைக்கும் வகையில் திங்கட்கிழமை (30) இந்த அமைப்பின் பிரதிநிதிகள் கனடிய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
தமிழர்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை மீறியதற்காக இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது கனேடிய அரசாங்கம் அண்மையில் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.
கனடாவின் இந்த முடிவை உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.