ஒரு இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக கிழக்கு Albertaவில் வதிவிட பாடசாலைக்கு அருகில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அமைப்பு கூறியது.
கிழக்கு Albertaவில் உள்ள வதிவிட பாடசாலைக்கு அருகில் உள்ள குறிக்கப்படாத கல்லறைகள் குறித்து முதற்குடி தேசங்களின் புலனாய்வாளர்கள் இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
காணாமல் போன குழந்தைகள், குறிக்கப்படாத கல்லறைகள் குறித்து ஆராயும் ஆரம்ப அறிக்கையின் விவரங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
Saddle Lake தளத்தில் காணாமல் போன குழந்தைகள் தொடர்பான விசாரணையின் கோட்பாடு, அவர்கள் குறிக்கப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர் என இந்த அறிக்கை கூறுகிறது.