தமிழரான சாரங்கன் சந்திரகாந்தனின் கொலை வழக்கில் மற்றுமொரு தமிழரான சரண்ராஜ் சிவகுமாருக்கு திங்கட்கிழமை (23) தண்டனை விதிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரான சாரங்கன் சந்திரகாந்தனின் கொலை வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் சரண்ராஜ் சிவகுமாருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இவற்றில் படுகொலை குற்றச்சாட்டில் 11.5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ய ஒரு துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு முன்னர் 5 ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட இவர், மேலும் 6.5 ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்படவுள்ளார்.
சரண்ராஜ் சிவகுமார் கனேடிய பிரஜை இல்லாததால், அவர் விடுதலையானதும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.