தேசியம்
செய்திகள்

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க அழைப்பு

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க மத்திய, மாகாண அரசாங்கத்திடம் Toronto பெரும்பாக நகர முதல்வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கு நிதி வழங்க Toronto பெரும்பாகம், Hamilton பகுதியில் உள்ள பல பெரிய நகராட்சிகளின் முதல்வர்கள் கோரியுள்ளனர்.

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக இருமட்ட அரசாங்கங்கள் உறுதியளித்ததாகவும் ஆனால் நகராட்சிகளால் கோரப்பட்ட நிதி இதுவரை கிடைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

உக்ரேனியர்களுக்கு நகராட்சிகளின் செலவில் தொடர்ந்து சேவைகளை வழங்குவதாக Toronto, Mississauga, Brampton, Vaughan உட்பட நகர முதல்வர்கள் கூறுகின்றனர்.

கடந்த வருடத்தின் ஆரம்பம் முதல் 145,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய குடிவரவாளர்கள் கனடாவிற்கு வந்துள்ளதாக அரசாங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts

கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம்!

Gaya Raja

மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் மத்திய வங்கி?

Lankathas Pathmanathan

Leave a Comment