கனடாவின் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான ஆண்டை எதிர்கொள்கிறது என இணை நிதியமைச்சர் Randy Boissonault தெரிவித்தார்.
மாகாணங்களுடனான ஒரு புதிய சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட பிரதான முன்னுரிமை விடயங்களுக்கு அரசாங்கம் நிதியை ஒதுக்கி வைத்துள்ளதாக அவர் வலியுறுத்துகிறார்.
Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (24) நிதியமைச்சர் Chrystia Freeland பொருளாதார அறிக்கை ஒன்றை வழங்கினார்.
நிச்சயமற்ற நிலை தொடர்வதாக கூறிய Boissonnault, வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் முன்னர் இதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.