ஆறு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கட்டுமான நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது,
Barrie Ontarioவைத் தளமாகக் கொண்ட Con-Drain குழும கட்டுமான நிறுவனம் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது.
மரணத்திற்கு காரணமான குற்றவியல் அலட்சியத்திற்காக இந்த நிறுவனத்தின் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த August மாதம் நிகழ்ந்த விபத்தில் ஆறு இளைஞர்கள் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.
கனடிய குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் தீவிரமானது என Barrie காவல்துறையின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க Con-Drain எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றம் செல்கிறது.