காய்ச்சல் பருவத்தின் உச்சத்தை கனடா எட்டியுள்ளதாக வெள்ளிக்கிழமை (13) வெளியான புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
வெள்ளியன்று வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் முதல் தேசிய FluWatch அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.
காய்ச்சல் பரவல் விகிதம் November இறுதியில் ஏற்பட்ட உச்சத்திலிருந்து கடுமையாக குறைந்துள்ளது என பொது சுகாதார முகமையின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
FluWatch என்பது கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தேசிய காய்ச்சல் கண்காணிப்பு அமைப்பாகும்.
இது காய்ச்சல், காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதை கண்காணிக்கிறது.
காய்ச்சல் பருவத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் FluWatch அறிக்கைகளை வெளியிடுகிறது.