கனடாவின் மேற்கு, கிழக்கு, வடக்கு பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா குளிர்கால எச்சரிக்கைகளை வெள்ளிக்கிழமை (13) வெளியிட்டது,
British Columbiaவின் வடக்குப் பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கைகளையும், தெற்குப் பகுதிக்கு மழை எச்சரிக்கைகளையும் சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது.
Albertaவின் சில பகுதிகளுக்கு வெள்ளி காலை உறைபனி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வெள்ளி பிற்பகலில் முதல் உறைபனி மழை படிப்படியாக பனியாக மாறும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்தது.
கிழக்கு கனடாவின் பெரும் பகுதிகள் குளிர்கால புயல், பனிப்பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளன
Ontario மாகாணத்தில் Ottawa உள்ளிட்ட பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த பகுதிகளில் 15 முதல் 25 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவை சுற்றுச்சூழல் கனடா கணித்துள்ளது.
இந்த பனிப்பொழிவு வெள்ளி இரவு Quebec மாகாணத்தை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Montreal பகுதியில் ஐந்து முதல் 15 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
Quebecகின் கிழக்கு பகுதியில் வெள்ளி உறைபனி மழை, குளிர்கால புயல் எச்சரிக்கை அமுலில் உள்ளன.
Atlantic மாகாணங்கள் வார இறுதியில் பனி, மழை ஆகியவற்றை எதிர்பார்க்கின்றன.
New Brunswick வெள்ளி இரவு முதல் நாளை வரை உறைபனி மழைக்கு தயாராகி வருகிறது.
New Brunswick மாகாணத்தின் சில பகுதிகளில் 20 முதல் 40 சென்டி மீட்டர் வரை பனிபொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
Nova Scotiaவில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
Halifax பகுதியில் மொத்தம் 40 முதல் 80 மில்லி மீட்டர்கள் வரை மழை பொழிவு கணிக்கப்பட்டுள்ளது.
Prince Edward Islandடில் வார இறுதியில் மழைப்பொழிவு, உறைபனி மழை, பனி ஆகியன எதிர்வு கூறப்படுகின்றன.
Newfoundland மாகாணத்தின் மேற்குப் பகுதி குளிர்காலப் புயலை எதிர்பார்க்கிறது.
Newfoundland மாகாணத்தின் சில பகுதிகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.
Nunavut பிராந்தியத்தில் கடுமையான குளிர் எச்சரிக்கை அமுலில் உள்ளது.
வெள்ளியன்று காற்றின் குளிர்ச்சியுடன் வெப்பநிலை – 55 செல்சியஸ் வரை குறையும் என எதிர்வு கூறப்பட்டது.