December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec எரிபொருள் விநியோக நிறுவன வெடிப்பு சம்பவத்தில் மூவரை காணவில்லை

Quebec propane நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது மூவர் காணாமல் போயுள்ளனர்.

எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வியாழக்கிழமை (12) காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மாகாண காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதில் மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என வியாழன் மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாகாண காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் இறப்புகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

வெடிப்பு சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சுமார் 50 தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களினால் விநியோக நிறுவனம் பாதுகாப்பானதென தீர்மானிக்கப்படும் வரை காவல்துறையினரால் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது என காவல்துறையின் பேச்சாளர் கூறினார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ஒரு கிலோ மீற்றர் சுற்றளவில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கனடா அமெரிக்கா எல்லைக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு

Lankathas Pathmanathan

Jamaicaவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க கனடியர்களுக்கு எச்சரிக்கை 

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் நான்காவது கனேடியர் பலி!

Lankathas Pathmanathan

Leave a Comment