தேசியம்
செய்திகள்

McKinsey ஒப்பந்தங்கள் குறித்து ஆராய பிரதமர் உறுதி!

McKinsey ஒப்பந்தங்கள் குறித்து ஆராய அமைச்சர்களை கோரியுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

McKinsey and Company ஆலோசனை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மத்திய ஒப்பந்தங்களை தனது அரசாங்கம் ஆய்வு செய்யும் என பிரதமர் வியாழக்கிழமை (12) கூறினார்.

2015 இல் Trudeau தலைமையில் Liberal கட்சி அரசமைத்ததில் இருந்து McKinsey உலகளாவிய ஆலோசனை நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக பல அறிக்கைகள் மேற்கோள் காட்டுகின்றன.

இந்த நிலையில் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விளக்கங்களைக் கோருகின்றன.

March 2021 முதல் November 2022 வரை McKinsey நிறுவனம் 84 மில்லியன் டொலர் ஒப்பந்தங்களைப் பெற்றதாக Canadian Press தெரிவித்துள்ளது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Tako Van Popta வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தரவு பெறப்பட்டுள்ளது.

தவிரவும் March 2015 முதல் April 2022 வரையிலான ஏழு நிதியாண்டுகளில் 66 மில்லியன் டொலர்களை ஒப்பந்தங்களாக McKinsey பெற்றதாக Radio-Canada அறிவித்தது.

கொள்முதல் அமைச்சர் Helena Jaczek, கருவூல வாரியத் தலைவர் Mona Fortier ஆகியோரிடம் இந்த ஒப்பந்தங்கள் முறையாக வழங்கப்பட்டதா என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் Trudeau கோரியுள்ளார்.

இந்த விடயத்தில் நாடாளுமன்ற விசாரணைக்கு Conservative தலைவர் Pierre Poilievre அழைப்பு விடுத்தார்.

புதிய ஜனநாயகக் கட்சியும் நாடாளுமன்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு சுயாதீன விசாரணையின் அவசியத்தை Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet வலியுறுத்தினார்.

Related posts

15 வயது பாடசாலை மாணவி தீ வைத்து எரிந்த சம்பவம்!

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை: Mike Schreiner

Lankathas Pathmanathan

13 முதற்குடியினர் மரணங்கள் குறித்து மீள் விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment