தேசியம்
செய்திகள்

மெக்சிகோ சென்றடைந்தார் பிரதமர் Trudeau

மெக்சிகோ நகரில் நடைபெறும் வட அமெரிக்க தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடிய பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (09) மாலை மெக்சிக்கோ நகரை சென்றடைந்தார்.

பிரதமர் Trudeau வணிகத் தலைவர்களுடன் திங்கள் பிற்பகல் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

வட அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிரதமர் Trudeauவுடன், அமெரிக்க ஜனாதிபதி Joe Biden, மெக்சிகோ ஜனாதிபதி Andres Manuel Lopez Obrador ஆகியோர் பங்கேற்கும் வட அமெரிக்க தலைவர்களின் உச்சி மாநாடு செவ்வாய்கிழமை (10) ஆரம்பமாகிறது.

கனடிய, அமெரிக்கத் தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட சந்திப்பும் செவ்வாயன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

இஸ்லாமிய அரசு தொடர்பான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை Calgary நபர் ஒப்புக்கொண்டார்

York பிராந்திய காவல்துறையினரால் Torontoவைச் சேர்ந்த தமிழர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,536

Leave a Comment