December 12, 2024
தேசியம்
செய்திகள்

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய Sunwing

விடுமுறை கால பயண இடையூறுகள் குறித்து Sunwing விமான நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

Sunwing விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர் ஆகியோர் இணைந்து வியாழக்கிழமை (05) வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

எமது வாடிக்கையாளர்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறோம் என அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த December 22 முதல் வானிலை காரணமாக ஏற்பட்ட விமான தடைகளால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

பயணிகளிடமிருந்து தகுதியான இழப்பீடுக்கான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், கனடாவின் விமானப் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதாகவும் Sunwing விமான நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில் விமானப் பயணிகளின் உரிமைகளை கடுமையாக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்துள்ளா.ர்

தனது அமைச்சிடம் விமான நிறுவனங்களுக்கான விதிகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்த திட்டங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

Related posts

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

மழை காரணமாக Quebec மாகாணத்தில் அவசர நிலை

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment