Quebec மாகாணத்தில் கனடா அமெரிக்கா எல்லைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (04) இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இவர் ஒரு புலம்பெயர்வாளர் என காவல்துறை வட்டார தகவல் மூலம் தெரியவருகிறது.
அமெரிக்கா வழியாக கனடாவுக்கு செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதியில் இந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.
இவர் இயற்கையான காரணங்களினாலோ அல்லது சுயமாக ஏற்படுத்திய காயங்களினாலோ இறந்ததாகத் தெரியவில்லை என ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்திருப்பதாக கூறும் Quebec குடிவரவு அமைச்சகம், தொடரும் விசாரணை காரணமாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.