தேசியம்
கட்டுரைகள்

பாகம் 2 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

சில மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு முதல் (minimum wage increases), வெளிநாட்டிலிருந்து சொத்து வாங்குவோர் மீது கனடா விதித்துள்ள தடை வரை (ban on foreign property buyers), 2023ஆம் ஆண்டில் பல புதிய விதிமுறைகளும் சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

2023 இல் நடைமுறைக்கு வரும் மாற்றங்களில் கனடியத் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியக் கழிவுகள் (higher payroll deductions), மூன்று Atlantic மாகாணங்களில் மத்திய அரசின் carbon விலை நிர்ணயம், Ontario மருந்தாளுநர்களுக்கு (pharmacists) புதிய மருந்து பரிந்துரைக்கும் அதிகாரங்கள் ஆகியவை அடங்கும்.

இவை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில புதிய சட்டங்களும் விதிகளும்:

நாடு முழுவதும்

வெளிநாட்டில் இருந்துகொண்டு வீடு வாங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை – Two-year ban on foreign homebuyers

January 1, 2023 முதல், வெளிநாட்டு வணிக நிறுவனங்களும் மக்களும் கனடாவில் குடியிருப்பு சொத்துக்களை கொள்வனவு செய்வது இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுகிறது. வீட்டுப் பற்றாக்குறை (housing shortages), வாங்கும் இயலுமை சிக்கல்களைத் (affordability issues) தீர்க்கும் முயற்சியாக கடந்த கோடையில் நாடாளுமன்றம் இந்த தடைக்கு ஒப்புதல் அளித்தது. ஆனாலும் தற்காலிக பணி அனுமதி உள்ளவர்கள் (temporary work permits), அகதி கோரிக்கையாளர்கள் (refugee claimants), சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சர்வதேச மாணவர்கள் (international students) உட்பட பலருக்கு புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

மத்திய அரசின் carbon விலை அதிகரிப்பு – Federal carbon price increase

April 1, 2023 முதல் மத்திய அரசின் carbon விலை தொன் (tonne) ஒன்றுக்கு $50 இல் இருந்து $65 ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது 11.05 சதமாகவுள்ள ஒரு litre carbon விலை 14.31 சதமாகவும் ஒரு litre எரிபொருளை கிட்டத்தட்ட $10.88 ஆகவும் உயர்த்தவுள்ளதாக கனடிய வரி செலுத்துவோர் அமைப்பு (Canadian Taxpayers’ Federation) தெரிவித்துள்ளது.

July 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் சுத்திகரிக்கப்பட்ட (தூய) எரிபொருள் விதிமுறைகள் (clean fuel regulations) எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வரி செலுத்துவோர் அமைப்பு கூறியுள்ளது. அந்த விதிமுறைகள் காரணமாக gasoline, diesel உற்பத்தியாளர்களும் இறக்குமதியாளர்களும் தங்களின் எரிபொருளின் carbon தீவிரத்தை குறைக்க வேண்டும்.

(தொடரும் …. )

Related posts

தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம் – வென்றது யார்?

Gaya Raja

ஓராண்டு முடிவில் Wet’suwet’en பழங்குடி மக்களின் போராட்டங்கள் பயனளித்தனவா?

Gaya Raja

எல்லாம் “Tamil Fest” செய்யும் மாயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment