தேசியம்
கட்டுரைகள்

பாகம் 1 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

சில மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு முதல் (minimum wage increases), வெளிநாட்டிலிருந்து சொத்து வாங்குவோர் மீது கனடா விதித்துள்ள தடை வரை (ban on foreign property buyers), 2023ஆம் ஆண்டில் பல புதிய விதிமுறைகளும் சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

2023 இல் நடைமுறைக்கு வரும் மாற்றங்களில் கனடியத் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியக் கழிவுகள் (higher payroll deductions), மூன்று Atlantic மாகாணங்களில் மத்திய அரசின் carbon விலை நிர்ணயம், Ontario மருந்தாளுநர்களுக்கு (pharmacists) புதிய மருந்து பரிந்துரைக்கும் அதிகாரங்கள் ஆகியவை அடங்கும்.

இவை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில புதிய சட்டங்களும் விதிகளும்:

நாடு முழுவதும்

அதிக ஊதியக் கழிவுகள்  (Higher payroll deductions)                                                                                     

கனடா ஓய்வூதியத் திட்ட (Canada Pension Plan – CPP) பங்களிப்புகள், வேலை வாய்ப்புக் காப்பீட்டு (employment insurance (EI) தவணைக் கட்டணங்கள் (premiums) 2023 இல் அதிகரித்து வருகின்றன. இதனால் கனேடிய தொழிலாளர்கள் இறுதியில் பெறும் ஊதியத்தின் அளவு குறைவடைகிறது.

ஊழியர்களதும் முதலாளிகளதும் CPP பங்களிப்பு விகிதங்கள் 2022 இல் 5.70 சதவீதத்திலிருந்து 2023 இல் 5.95 சதவீதமாக அதிகரிக்கும் என கனடா வருவாய் முகமை (Canada Revenue Agency) November மாதம் அறிவித்தது.

அதாவது 2023 ஆம் ஆண்டிற்கான CPP திட்டத்திற்கான அதிகபட்ச பணியாளர் பங்களிப்பு $3,754.45 ஆக இருக்கும், இது 2022 இல் $3,499.80 ஆக இருந்தது.

வேலைவாய்ப்புக் காப்பீட்டு விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, 2022 இல் $952.74 ஆக இருந்த வருடாந்த EI தவணைக் கட்டணம் 2023 இல் $1,002.45 ஆக அதிகரிக்கும் என ஒரு பிரத்தியேக அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

CPP, EI பங்களிப்பு அதிகரிப்பால், ஒவ்வொரு கனடிய தொழிலாளியும் அடுத்த ஆண்டு வருடாந்தம் பெறும் வருமானத்தில் $305 வரை குறைவடைவதைக் காண்பார்கள் என கனேடிய சுதந்திர வணிகங்களின் கூட்டமைப்பு (Canadian Federation of Independent Businesses) கூறியுள்ளது.

(தொடரும் …. )

Related posts

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது?

Lankathas Pathmanathan

2021 தேர்தல்: சில குறிப்புகள் -நாடாளுமன்றத்தில் மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள்!

Gaya Raja

ஓராண்டு முடிவில் Wet’suwet’en பழங்குடி மக்களின் போராட்டங்கள் பயனளித்தனவா?

Gaya Raja

Leave a Comment