தேசியம்
செய்திகள்

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

கடந்த வாரம் Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என Quebecகின் பொது பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

21 வயதான Nicous D’Andre Spring, கடந்த சனிக்கிழமை (24) Montreal சிறையில் இறந்தார்.

அவர் மரணமடைந்ததற்கு முந்தைய நாள் சிறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

பிணை விசாரணையை தொடர்ந்து December மாதம் 23ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் அவர் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டார் எனவும் அமைச்சு உறுதிப்படுத்துகிறது.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இவரது மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி தற்காலிகமாக அவரது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அமைச்சு புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் பலியான Nicous D’Andre Springகை நினைவு கூறும் வகையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வு நாளை மாலை Montreal பூங்கா ஒன்றில் நடைபெறவுள்ளது.

Related posts

தொடரும் Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி!

Gaya Raja

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் குறைவாக தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

400 நெடுஞ்சாலை வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment