PS752 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான பிணைப்பு நடுவர் மன்றத்திற்கு ஈரானுக்கு அழைப்பு விடுக்கும் நான்கு நாடுகளில் கனடாவும் இணைந்துள்ளது.
வர்த்தக விமானங்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் மூலம் புதன்கிழமை (28) இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
கனடாவுடன் இணைந்து பிரிட்டன், ஸ்வீடன், உக்ரைன் ஆகிய நாடுகள் இந்த கோரிக்கையை விடுத்தன.
PS752 விமானம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் பயணம் செய்த 176 பேரும் பலியானவர்கள்.
பயணிகளில் 55 கனேடிய குடிமக்கள், 30 நிரந்தர குடியிருப்பாளர்களும், கனடாவுடன் உறவு கொண்டவர்களும் அடங்கினர்.