ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை செவ்வாய்க்கிழமை (20) முதல் அமுலுக்கு வருகிறது
செவ்வாய் முதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி எனப்படும் plastic பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் கனடா தடை விதிக்கிறது.
2030ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் plastic கழிவுகளை அடைவதற்கான முயற்சியில் பெரும் பகுதியாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது.
ஒரு முறை பயன்படுத்தும் plastic பொருட்கள் உற்பத்தி, இறக்குமதிக்கான தடை செவ்வாய் முதல் அமுலுக்கு வருகிறது.
இந்த பொருட்களின் விற்பனை December 2023 முதல் தடை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், கனடியர்கள் குறைந்தது 3 மில்லியன் tonnes plastic கழிவுகளை வீசுகின்றனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.