குறிப்பிடத்தக்க குளிர்கால புயல் இந்த வாரம் Toronto பெரும்பாகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை (22) Toronto பெரும்பாகத்தை தாக்க ஆரம்பிக்கும் குளிர்கால புயல் விடுமுறை வார இறுதியில் தொடரும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
Toronto நகரம், York, Durham, Peel, Halton பகுதிகள் உட்பட சுற்றுப்புறப் பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா சிறப்பு வானிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (23) ஆரம்பத்தில் பல பகுதிகளில் மழையாக மாறுவதற்கு முன்னர் வியாழன் பிற்பகுதியில் மழை அல்லது பனிப்பொழிவு ஆரம்பிக்கலாம் என சுற்றுச்சூழல் கனடா கூறுகின்றது.
வெள்ளிக்கிழமை முதல் வார இறுதி முழுவதும் வெப்பநிலை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குளிராக இருக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.