Maritimes மாகாணங்களில் குளிர்கால புயல் காரணமாக ஆயிரக் கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த புயல் காரணமாக பல பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (13) மூடப்பட்டன.
செவ்வாயன்று பெரும்பாலான Maritimes மாகாணங்கள் புயல் எச்சரிக்கையின் கீழ் இருந்தன.
செவ்வாய்க்கிழமை 40 centimetre வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு 100 km வேகத்தில் காற்று வீசும் எனவும் முன்னறிவிப்பு விடுக்கப்பட்டது.
செவ்வாய் மாலை முதல் பனி, மழையாக மாறியது.
சில பகுதிகளில் 40 millimetre வரை மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்தது.
இது வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கிறது.