குளிர்காலப் புயல் காரணமாக Toronto பெரும்பாகத்தில் வெள்ளிகிழமைக்குள் (16) 10 centimetre வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
இது குறித்து சுற்றுச்சூழல் கனடா சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெற்கு Ontarioவின் பெரும் பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது பாதுகாப்பற்ற பயண நிலைமைகளை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கிறது.
இந்த நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு சுற்றுச்சூழல் கனடா அறிவுறுத்துகிறது.