கனடா நோக்கி வீசும் புயல் காரணமாக நான்கு மாகாணங்கள் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இந்த புயல் தெற்கு Saskatchewan, Manitoba ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் பனிப் புயல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் தென்கிழக்கு Saskatchewan, தெற்கு Manitobaவை மட்டுமே பாதிக்கும் என சுற்றுச்சூழல் கனடாவின் வானிலை ஆய்வாளர் தெரிவித்தார்.
இந்த புயல் தெற்கு Manitobaவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த இரண்டு மாகாணங்களும் ஏற்கனவே பனிப்பொழிவை எதிர்கொள்ளும் நிலையில், இந்த புயல் செய்வாய்கிழமை (13) நாளை இரவு முதல் புதன்கிழமை (14) வரை தொடர்ந்தும் பனிப்பொழிவை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
இந்த புயல் வார இறுதியில் கிழக்கு Ontarioவின் சில பகுதிகளை தாக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்த புயல் காரணமாக வடமேற்கு Ontario, தெற்கு Ontarioவின் சில பகுதிகள், Quebec ஆகிய இடங்களில் வியாழன். வெள்ளிக்கிழமைகளில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.