துப்பாக்கிகள் தொடர்புடைய வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கிறது.
2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையில் துப்பாக்கிகள் தொடர்புடைய வன்முறை குற்றங்கள் ஐந்து சதவீதம் குறைந்துள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் மூலம் இந்த தகவல் வெளியானது.
பொதுவாக வன்முறை குற்றங்கள் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளன
ஆனால் Toronto உட்பட நகர்ப்புறங்களில் துப்பாக்கி தொடர்பான குற்றங்கள் குறைந்ததால், அது துப்பாக்கி வன்முறை குற்றங்கள் குறைய வழிவகுத்துள்ளது .
Torontoவில், துப்பாக்கி தொடர்பான குற்றங்களின் விகிதம் முந்தைய ஆண்டை விட 2021 இல் 22 சதவீதம் குறைவாக இருந்தது.
ஆனாலும் நாடு முழுவதும், துப்பாக்கி தொடர்பான வன்முறை குற்றங்களின் விகிதம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட 25 சதவீதம் அதிகமாக இருந்தது.