December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறலில் 360,000 பேர் பாதிப்பு

Ontario மாகாண COVID தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறல் பெருமளவானவர்களை பாதிக்கிறது என மாகாணம் கூறுகிறது.

மாகாண தடுப்பூசி முன்பதிவு இணைய பாதுகாப்பு மீறல் காரணமாக 360,000 பேரின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ontario பொது வணிக சேவை விநியோக அமைச்சகம் வெள்ளிக்கிழமை (09) ஒரு அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டது.

95 சதவீதமானவர்களின் பெயர்கள், அல்லது தொலைபேசி எண்கள் மட்டுமே வெளியாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளி முதல் மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெற ஆரம்பிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது

கடந்த வருடம் November 16ஆம் திகதி Ontario மாகாண காவல்துறை இந்த பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க ஆரம்பித்தது.

இந்த சம்பவத்தில் ஒரு வாரத்தின் பின்னர் இரண்டு பேர் மீது காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டது.

அவர்களில் ஒருவர் Ontario அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பாடசாலை உணவு திட்டத்தை உருவாக்கும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

Saskatchewanனில் பொது சுகாதார கட்டுப்பாடுகள் -விரைவில் அகற்றப்படும்!

Gaya Raja

Conservative கட்சியின் முன்னாள் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment