February 22, 2025
தேசியம்
செய்திகள்

பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா சிறந்த நிலையில் உள்ளது: IMF

வீட்டு விலைகளில் ஏற்படும் திருத்தம், பணவீக்கம் ஆகியவை கனடாவின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்துகளாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது.

பல வருட பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ளதாக IMF கூறுகிறது.

வியாழக்கிழமை (08) வெளியிடப்பட்ட IMF அறிக்கை, கனடிய பொருளாதாரத்தை அதன் G7 சகாக்களில் ஒரு சிறந்த செயல்திறன் கொண்டதாக நிலை நிறுத்துகிறது.

IMF கணிப்புகளின் படி, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கனடிய பணவீக்கம் இரண்டு சதவீதமாகவும், வேலையற்றோர் விகிதம் 6.2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கனடிய மத்திய வங்கி, Liberal அரசாங்கத்தின் கணிப்புகளுடன் பொருந்துகின்றது.

ஆனாலும் மந்த நிலை அல்லது பொருளாதார வீழ்ச்சியின் அபாயம் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம்!

Gaya Raja

50 மில்லியன் டொலர் மதிப்புள்ள opium பறிமுதல்

Lankathas Pathmanathan

போலியான COVID சோதனை முடிவுகளை வழங்கிய விமானப் பயணிகளுக்கு  17 ஆயிரம் டொலர் அபராதம்

Lankathas Pathmanathan

Leave a Comment