Alberta அரசாங்கத்தினால் செவ்வாய்கிழமை (29) முன்மொழியப்பட்ட விதிவிலக்கான அதிகாரங்களை கொண்ட இறையாண்மை சட்டம் குறித்து அவதானித்து வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை Alberta மாகாண முதல்வர் Danielle Smith செவ்வாயன்று அறிமுகப்படுத்தினார்.
இந்த சட்டத்தை மத்திய அரசாங்கம் எதிர்க்க விரும்புகிறாதா என புதன்கிழமை (30) பிரதமரிடன் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த Trudeau, முன்மொழியப்பட்ட இந்த சட்ட வரவை அவதானித்து வருவதாக கூறினார்.