தேசியம்
செய்திகள்

சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை அறிமுகப்படுத்திய Alberta அரசு

சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை Alberta அரசாங்கம் செவ்வாக்கிழமை (29) அறிமுகப்படுத்தியது.

Alberta சட்டமன்றத்தில் ஆரம்பமான இலையுதிர் கால அமர்வின் போது, ஐக்கிய Conservative அரசாங்கம் இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது

மாகாண முதல்வர் Danielle Smith சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இது கனடாவை விட்டு வெளியேறுவதற்கான ஒரு முயற்சி இல்லை என முதல்வர் உறுதியளித்தார்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மாகாண அதிகார வரம்பில் தலையிடும் மத்திய அரசின் எல்லை மீறல்கலை எதிர்க்க முடியும் என Alberta மாகாணம் கூறுகிறது.

இந்த இறையாண்மைச் சட்டம், சட்டங்களை மாற்றுவதற்கு அமைச்சரவைக்கு ஒருதலைப்பட்ச அதிகாரங்களை வழங்குகிறது.

ஐக்கிய Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் Smith வெற்றி பெற்றதற்கு முன்மொழியப்பட்ட சட்டம் முக்கியமான உறுதிமொழியாகும்.

Related posts

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க அழைப்பு

Lankathas Pathmanathan

ஆயிரம் கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து ஆயுதப்படை விமானங்களில் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment