தேசியம்
செய்திகள்

ஆரம்பமானது Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு

Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு செவ்வாக்கிழமை (29) ஆரம்பமானது.

சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக Nathalie Roy நியமிக்கப்பட்டார்.

Quebec சட்டமன்றத்தின் வரலாற்றில் இரண்டாவது பெண் சபாநாயகர் இவராவார்.

சட்டமன்றத்தில் மொத்தம் 125 உறுப்பினர்களில் 57 பேர் பெண்களாவார்கள்

இம்முறை 37 புதிய உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்

ஆனாலும் முதலாம் நாள் அமர்வில் Parti Quebecois சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் பங்கேற்கவில்லை.

இவர்கள் மூவரும் மூன்றாம் சார்லஸ் அரசர் மீது உறுதிமொழி எடுத்து பதவிப் பிரமாணம் செய்ய மறுத்துள்ளனர்.

Quebec சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கனேடிய அரசியலமைப்பின்படி இரண்டு விசுவாசப் பிரமாணங்களை எடுக்க வேண்டும்.

இவற்றில் ஒன்று Quebec மக்களுக்கும் மற்றொன்று அரசருக்கும் விசுவாசமாக இருப்போம் என்பதாகும்.

அரசருக்கும் விசுவாசமாக இருப்போம் என்ற அவமானகரமான சத்திய பிரமாணத்தை தனது கட்சி எடுக்காது என Parti Quebecois தலைவர் கூறினார்.

இந்த நிலையில் அரசருக்கான விசுவாச பிரமாணம் செய்வதை கட்டாயமற்றதாக மாற்றுவதற்கான இரண்டு மசோதாக்கள் ஒரு வார காலத்தினுள் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்வுள்ளன.

தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தெரிவான முன்னாள் Liberal கட்சியின் தலைவி Dominique Anglade முதலாம் நாள் அமர்வில் கலந்து கொள்ளவிலை.

கடந்த தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் போது இன்று இரண்டு ஆர்ப்பாட்டங்கள் சட்டமன்றத்தின் முன்பாக நடைபெற்றன.

Related posts

மேல் சட்டசபை செலவுகள் 2023இல் $7.2 மில்லியன்!

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – அனிதா ஆனந்தராஜன்

இந்த ஆண்டு Ontario 186.1 பில்லியன் டொலரை செலவிடும் – வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் தகவல்!

Gaya Raja

Leave a Comment