சுவாச ஒத்திசைவு தொற்றின் மூலம் வயோதிபர்கள் கடுமையாக நோய் வாய்ப்படும் சாத்தியக்கூறு குறித்து கனடிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
சுவாச ஒத்திசைவு தொற்றால் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் சிறுவர் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும் நிலையில் முதியவர்கள் குறித்து எச்சரிக்கை வெளியாகியது.
அடுத்த அலையில் முதியவர்கள் தீவிர நோய்வாய்ப்படும் சாத்தியக்கூறுகள் குறித்து மருத்துவர்கள் கவலை வெளியிட்டனர்.
சுவாச ஒத்திசைவு தொற்றின் ஆபத்தில் முதியவர்கள் உள்ள நிலையில் Health கனடா 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை மதிப்பாய்வு செய்து வருகிறது.
சுவாச ஒத்திசைவு தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் குறித்த தரவுகளை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் சேகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.