கனேடிய சில்லறை விற்பனை September மாதத்தில் 0.5 சதவீதம் குறைந்துள்ளது.
September மாதத்தில் சில்லறை விற்பனை 61.1 பில்லியன் டொலராக இருந்தது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.
எரிபொருள் நிலையங்களில் விற்பனை வீழ்ச்சியால் இந்த விற்பனை குறைவு ஏற்பட்டுள்ளது.
உணவு, குளிர்பானக் கடைகளிலும் விற்பனை குறைந்துள்ளதாக புள்ளிவிவர திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் October மாதத்திற்கான ஆரம்ப மதிப்பீட்டின்படி, இந்த மாதத்திற்கான லாபம் 1.5 சதவிகிதம் என புள்ளி விபரத் திணைக்களம் கூறியது.
September மாதத்தில் எரிபொருள் நிலையங்களில் விற்பனை 2.4 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிலையங்களில் அளவு அடிப்படையில் விற்பனை 4.2 சதவீதம் உயர்ந்தது.
ஆனால் எரிபொருள் விலை 7.4 சதவீதம் குறைந்ததால் இந்த விற்பனை குறைவு பதிவானது.