அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கனடா தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வலியுறுத்தினார்.
NATOவுடனான எமது பலதரப்பு கூட்டணிகளுக்கும் உக்ரைனுக்கான இருதரப்பு ஆதரவுக்கும் நாம் பங்களிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதில் நாங்கள் முன்னிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்களின் உலகின் மிகப்பெரிய கூட்டம் இந்த வார இறுதியில் Halifaxசில் நடைபெற்ற நிலையில் அமைச்சர் அனந்தின் இந்த கருத்துக்கள் வெளியாகின.
உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பை மேம்படுத்தவும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலரை சனிக்கிழமை (19) அமைச்சர் ஆனந்த் சந்தித்தார்.