December 12, 2024
தேசியம்
செய்திகள்

FIFA உலகக் கோப்பை தொடருக்காக அமைச்சர் Sajjan கத்தார் பயணம்

2022 FIFA உலகக் கோப்பை தொடருக்காக, சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Harjit Sajjan கத்தார் பயணமானார்.

திங்கட்கிழமை (21) ஆரம்பமான அமைச்சரின் பயணம் புதன்கிழமை வரை தொடரவுள்ளது.

புதன்கிழமை (23) பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளும் கனடிய அணியின் முதலாவது ஆட்டத்தை அமைச்சர் பார்வையிடவுள்ளார்

தவிரவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், மெக்சிகோவின் வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருடன் அமைச்சர் Sajjan ஒரு முத்தரப்பு விளையாட்டு இராஜதந்திர நிகழ்விலும் பங்கேற்பார்.

இந்த பயணத்தின் போது மனிதாபிமான உதவி, சர்வதேச மேம்பாடு குறித்து விவாதிக்க கத்தாரின் துணைப் பிரதமருடன் அமைச்சர் Sajjan சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில் கத்தாருக்கு கனடிய அரசாங்க பிரதிநிதிகள் அனுப்பப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என LGBTQ2 சமூகம் தெரிவிக்கிறது.

கத்தாரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கூறப்படும் நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் கனடிய அணி பங்கேற்க வேண்டுமா என்பது குறித்த விவாதம் நடைபெற்றது.

சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக 2022 Beijing Olympic போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்க கனடாவின் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க தேர்தல் முடிவுகள் கனடிய எல்லையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் என்ன?

Lankathas Pathmanathan

பெரிய வியாபார நிலையங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி கடவுச்சீட்டை வைத்திருப்பது அவசியம்

Lankathas Pathmanathan

Carbon வரி தள்ளுபடி திட்டம் மறுபெயரிடபடுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment