கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியதால் திங்கட்கிழமை (21) நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது.
கல்வி ஊழியர்களும் அரசாங்கமும் ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியதால், Ontarioவில் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது.
கனடிய பொது ஊழியர் சங்கத்திற்கும் (CUPE), Ontario மாகாணத்திற்கு இடையே வார இறுதியில் தொடர்ந்த தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தம் CUPE உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இந்த வாக்கெடுப்பு வியாழக்கிழமை (24) ஆரம்பமாகி வார இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.